கறவைமாடு-நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

கறவைமாடு-நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

Update: 2022-02-12 14:04 GMT
நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நவீன முறையில் கறவை மாட்டுப்பண்ணை பராமரித்தல் என்ற தலைப்பிலான 3 நாள் பயிற்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து புறக்கடையில் நாட்டுக்கோழி பராமரிப்பு குறித்த பயிற்சி வருகிற 17-ந் தேதி, 18-ந் தேதி, 21-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவர் சபாபதி ஆகியோர் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்