வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை திருட்டு

வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-02-12 01:20 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சிவ சுப்பிரமணியன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்று விட்டார்.

நேற்று மீண்டும் குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள், பொருட்கள் அறை முழுவதும் சிதறி கிடந்தது. பீரோவை சோதனை செய்தபோது, அதில் வைத்து இருந்த 26 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

சிவசுப்பிரமணியன், குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது தெரிந்தது. இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்