சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-02-11 21:59 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 189 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 165 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 34 பேர், சேலம் ஒன்றியத்தில் 41 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்த 64 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 603 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 2 ஆயிரத்து 609 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 53 மற்றும் 80 வயதுடைய 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட கொரோனாவுக்கு 1,753 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்