மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது;

Update: 2022-02-11 21:36 GMT
நெல்லை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் ரகீம்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டைகளாக இருப்பதாக நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு லாரியில் 80 மூட்டைகளில் 3 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் லாரியில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த முன்னீர் (வயது 49) என்பதும், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரேஷன் அரிசியை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தியதும் தெரியவந்தது. உடனே போலீசார் முன்னீரை கைது செய்து, அவரிடமிருந்து 3 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்