கர்நாடகத்தில் கொரோனா பரவல் சரிவு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது. புதிதாக 3,976 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-02-11 21:34 GMT
பெங்களூரு:

  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இறந்தவர்கள் எண்ணிக்கை

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 302 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 3,976 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 39 லட்சத்து 21 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 41 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளது.

  ஒரே நாளில் 11 ஆயிரத்து 377 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 36 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 3.47 ஆக உள்ளது. புதிதாக வைரஸ் தொற்று பாதித்தோரில் பல்லாரியில் 139 பேர், பெலகாவியில் 316 பேர், பெங்களூரு நகரில் 1,725 பேர், தார்வாரில் 127 பேர், குடகில் 127 பேர், மைசூருவில் 226 பேர், சிவமொக்காவில் 137 பேர், துமகூருவில் 194 பேர் உள்ளனர்.

சிகிச்சை பெற்று...

  கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 11 பேரும், தட்சிண கன்னடாவில் 6 பேரும், மண்டியா, மைசூருவில் 3 பேரும், பாகல்கோட்டை, சிக்பள்ளாப்பூர், தார்வார், துமகூருவில் தலா 2 பேரும் என மொத்தம் 41 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.

மேலும் செய்திகள்