புளியங்குடியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
புளியங்குடியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது;
புளியங்குடி:
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முகம்மது யாகூப் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் மைதீன்சேட் கான், செயற்குழு உறுப்பினர் மவுலவி ஹூசைன் மன்பஈ, பேராசிரியை ராபியா ரோஷன், நகர தலைவர் செய்யது, ம.ம.க. மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் சுலைமான், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் இம்ரான்கான் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.