பெரம்பலூர்:
முதியவர் சாவு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 11 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 39 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 104 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சை
ஆனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 163 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 367 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.