பழவூரில் 32 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

32 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

Update: 2022-02-11 20:56 GMT
வள்ளியூர்:
வடக்கன்குளம் அருகே பழவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் பெற்றவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, முதல்கட்டமாக 32 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், ‘பழவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.14.64 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் முதல் கட்டமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பழவூரில் ரூ.90 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.40 லட்சத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள கிராமங்களில் வீடுகளுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் ரூ.352 கோடியில் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவு பெறும்’ என்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்