மகளின் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மகளின் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-11 20:38 GMT
களியக்காவிளை, 
மகளின் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தொழிலாளி 
குமரி மாவட்டம் மேல்பாலை நிலவாணி விளையை சேர்ந்தவர் ரெஜிகுமார் (வயது 47), தொழிலாளி. இவர் தனது மகளின் திருமணத்தை நடத்த பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கியுள்ளார். 
 ஆனால் இந்த கடனை அவரால் அடைக்க முடியவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப ேகட்டு வந்தனர். இதனால் ரெஜிகுமார் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். 
விஷம் குடித்தார்
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரெஜிகுமார் விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடினார். இதனை கவனித்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளின் திருமணத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்