ஒருவழிப் பாதையில் செல்லும் வாகனங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறைகள் தினத்தந்தி புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-02-11 19:47 GMT
திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் வேதாரண்யம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மாற்று வழி பாதை திறக்கப்பட்ட பிறகு திருத்துறைப்பூண்டி செல்வது தவிர்க்கப்பட்டு மாற்று வழி பாதை வழியாக மட்டுமே செல்லும்படி போக்குவரத்து காவலர்கள் மூலமாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு பலகை பயனற்றதாக அப்படியே இருக்கிறது அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும் நோ என்ட்ரி பலகையை பொருட்படுத்தாமல் ஒரு வழிபாதையில் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று வழிப் பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-திருத்துறைப்பூண்டி, மக்கள்.

மேலும் செய்திகள்