திருச்சி: இரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
இரவின் வெவ்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் துவரக்குறிச்சியில் உள்ள வளநாடு பகுதியில் இரண்டு வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடுத்துள்ளனர்.
அந்த வீட்டிற்கு அருகே இருந்த மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இரு வெவ்வேறு வீடுகளிலும் மொத்தம் 18 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை குறித்து வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையை துரிதபடுத்தியுள்ளனர்.