டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி

அருப்புக்கோட்டை அருகே டயர் வெடித்து நடுேராட்டில் லாரி கவிழ்ந்தது.

Update: 2022-02-11 19:29 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சியில் இருந்து திருவிழாவிற்கு தேவையான அலங்கார மின் விளக்குகள், எலக்ட்ரிக்கல் சாதனங்கள், ஜெனரேட்டர் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்புமாடல் நகர் சாய்பாபா கோவில் முன்பு சென்று கொண்டிருக்ககும் போது திடீரென டயர் வெடித்ததில் லாரி நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜெனரேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி போலீசார் கிரேன் உதவியுடன் மினி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

மேலும் செய்திகள்