விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மன்னார்குடி-ஒரத்தநாடு சாலை பகுதியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மன்னார்குடி:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பேரையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளையரசன் (வயது 34). இவர், திருமணமாகவில்லை என்ற மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மன்னார்குடி- ஒரத்தநாடு சாலையில் நத்தம் முனீஸ்வரர் கோவில் அருகே இளையரசன் இறந்து கிடந்துள்ளார். அவர் உடல் அருகே மது பாட்டிலும், விஷப்பாட்டிலும் கிடந்தன. இதனால் திருமணமாகாத ஏக்கத்தில் இளையரசன் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளையரசன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.