சாதனை படைத்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

சாதனை படைத்த மாணவர்களை கலெக்டர் நேரில் அழைத்து பாராட்டினார்.

Update: 2022-02-11 19:18 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் ராஜ்குமார், லீலாவதி மகன் டால்வின்ராஜு வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் யோகாவில் உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கலாம் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதனை படைத்த மாணவனை கலெக்டர் மேகநாதரெட்டி அழைத்து, பாராட்டி பரிசுகளும் வழங்கினார்.  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்திய முற்றோதல் போட்டியில் சிறப்பாக திருக்குறளை ஒப்புவித்து பரிசு பெற்றமைக்காக அதே பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஜெகன்நாத்தையும் கலெக்டர் பாராட்டி பரிசுகள் வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, ஒருங்கிணைந்த திட்ட இயக்குனர் சிவசக்தி கணேஷ் குமார், இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன், யோகா மாஸ்டர் இசக்கிமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்