‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-11 19:16 GMT
புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ராஜா காலனி வழியாக செல்லும் சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்வதற்காக சிறிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பாலம் சாலையை விட சற்று உயரமாக உள்ளதால் அந்த வழியாக அதிவேகமாக வாகனங்களில் செல்வோர் மற்றும் இரவு நேரங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கிருபாகரன், ராஜா காலனி திருச்சி.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
திருச்சி ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் பாதாள சாக்கடைக்காக  தோண்டப்பட்ட பள்ளம். கான்கிரீட் கலவைகளால் மூடப்பட்டு உள்ளது. ஆனால் அவை சாலையின் உயரத்தை விட சற்று உயரமாக இருப்பதால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ரெயில் நிலையத்திற்கு புதிதாக வருபவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சீரமைக்க வேண்டும்.
அசோக், திருச்சி.
வீணாகும் குடிநீர்
திருச்சி லால்குடி நகராட்சிக்குட்பட்ட தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் பெரும்பாலான பெண்கள்  துணிகள் மற்றும் பாத்திரங்களை கழுவி வருகிறார்கள். இதனால் தண்ணீர் அதிகளவில் விரயம் ஆகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீரை வீணாக்குபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
சித்ரா, லால்குடி, திருச்சி.
வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி மாவட்டம் முசிறி-மணமேடு மெயின் ரோட்டில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக மாடுகள் திடீரென சாலையை கடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
ராஜா, திருச்சி.
திருச்சி மாநகராட்சி வார்டு எண்-39 பாத்திமாபுரம் சாலையில் சாக்கடை பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளத்தை சமபடுத்தாமல் ஊழியர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சமப்படுத்த வேண்டும்.
அப்துல் ரஹ்மான், காட்டூர், திருச்சி.

மேலும் செய்திகள்