தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளில் முறைகேடு. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-02-11 18:41 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் மரிமானிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று  கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு மேற்கொண்டார். 
அந்த கிராமத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தபோது அங்கு பணியாளர்களை கொண்டு வேலைகளை செய்யாமல், எந்திரங்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார், மேலும் முறையாக அரசின் அறிவிப்புகளை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டு ஊராட்சி செயலாளர் ஆர்.தண்டபாணி தன்னுடைய விருப்பத்தின்படி அங்கு பணிகளையும் மேற்கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் ஆர்.தண்டபாணியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்