ராணிப்பேட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு

ராணிப்பேட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

Update: 2022-02-11 18:39 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகராட்சியில் தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் அமைதியாக நடைபெறும் பொருட்டும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் பொருட்டும், போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று ராணிப்பேட்டையில் நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர். ஊர்வலம் ராணிப்பேட்டை முத்துக்கடையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

மேலும் செய்திகள்