மூங்கில்துறைப்பட்டு அருகே இரு தரப்பினரிடையே மோதல் விவசாயி கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே இரு தரப்பினரிடையே மோதல் விவசாயி கைது;
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 61). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஏழுமலை(35) என்பவருக்கும் இடையே நில பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியாக வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, பிரபா, அருளானந்தம், விசாலம், மேகலா, பெரியசாமி உள்ளிட்ட 6 பேர் மீதும், ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சண்முகம், பெரியசாமி, சக்திவேல், கண்ணம்மாள், வசந்தி உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.