செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது.
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது.
சுல்தான்பேட்டை
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது.
கொப்பரை தேங்காய்
சுல்தான்பேட்டை, செஞ்சேரி, வதம்பசேரி, செஞ்சேரிபுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் தேங்காய் மற்றும் இளநீர் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அது போன்று கொப்பரை தேங்காய்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
கொள்முதல் தொடங்கியது
இந்த நிலையில் செஞ்சேரி பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் தொடங்கியது. 9 விவசாயிகள் தலா 50 கிலோ கொண்ட 200 மூடை கொப்பரைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் அரவை கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
தொடர்பு கொள்ளலாம்
இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் இசாக் கூறும்போது, இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை விற்பனை செய்ய 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முன்பதிவு செய்து உள்ளனர். இங்கு கொப்பரை விற்பனை தொடர்பாக விவசாயிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.