கல்வராயன்மலையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2022-02-11 17:31 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை குரும்பாலூர் வனப்பகுதியில் உள்ள தடுத்தான் பாளையம் ஓடையில் சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ரவிகுமார் மற்றும் போலீசார்  தடுத்தான்பாளையம் ஓடை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக 3 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் 1,500 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குரும்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த தீர்தன் மகன் ஏழுமலை என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்