வேதாரண்யம்;
வேதாரண்யம் அருகே தேத்தாகுடி வடக்கு மற்றும் புஷ்பவனம் மீனவர் காலனியை இணைக்கும் வகையில் உப்பனாறு பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மதுவை குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து போடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் பாலத்தில் மின்விளக்கு வசதி அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு உடனடியாக மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலத்தின் அருகே பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.