மாவட்ட அளவிலான பேச்சு போட்டி
மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள் என்று நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார்.
வெளிப்பாளையம்;
மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள் என்று நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
பேச்சு போட்டி
நாகை மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில், நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தலைநிமிரும்
தமிழகம் என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவ- மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.
20-ந் தேதிக்குள்
மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ம் பரிசு ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகளை ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் சார்பில் தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் என தலா 2 மாணவர்களை அனுப்பலாம். மாணவர்கள்
வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை smcelocution@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
அல்லது உறுப்பினர் செயலாளர், மாநிலசிறுபான்மையினர் ஆணையம், 735, அண்ணா சாலை, எல்.எல்.ஏ. கட்டிடம், 3-வது தளம், சென்னை 600002 என்ற முகவரிக்கும் அனுப்பலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்்டர் அருண்தம்புராஜ் கூறியுள்ளார்.