2 மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு

நாகை மாவட்டத்தில் 2 மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று தொடங்குகிறது.

Update: 2022-02-11 17:13 GMT
வெளிப்பாளையம்;
நாகை மாவட்டத்தில் 2 மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று தொடங்குகிறது.
ஆசிரியர்கள் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரையிலான ஆசிரியர்களை தேர்வு செய்ய போட்டித்தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வு வாரியம் வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி பயிற்றுனர்கள் நிலை 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு கணினி வாயிலாக இன்று (சனிக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி நாகை மாவட்டத்தில் பாப்பாகோயில் ஐசக்நியூட்டன் கல்லூரியிலும், திருக்குவளை அண்ணா பொறியியல் கல்லூரியிலும் இந்த தேர்வு நடைபெறுகிறது.
நுழைவு சீட்டு
ஒரு மையத்தில் நாள் ஒன்றுக்கு 170 பேர் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக அரசு பஸ் இயக்கப்படுகிறது. தேர்வுக்கு செல்வோர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என தேர்வுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்