ரெயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட கை
ரெயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட கை
கோவை
கோவை ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடை தண்டவாளத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு கை கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அந்த கையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கை யாருடையது?, யாரேனும் கொலை செய்து கையை வீசி விட்டு சென்றார்களா? அல்லது ரெயிலில் அடிபட்ட தால் துண்டான கையா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், 5-வது நடைமேடை யில் கோவை-மேட்டுப்பாளையம் மற்றும் கோவை- அசாம் ரெயில் கள் மட்டுமே இன்று (நேற்று) இயக்கப்பட்டன. ரெயிலில் அடிபட்ட வரின் கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகள் ரெயிலின் அடிப்பகுதியில் சிக்குவது வழக்கம்.
எனவே அசாம் ரெயில் வழித்தடத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு யாராவது ரெயிலில் அடிபட்டு இறந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். தண்டவாளத்தில் துண்டிக்கப்பட்ட கை கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.