ஜவுளிக்கடை வியாபாரியிடம் ரூ.2¾ லட்சம் பறிமுதல்

சிவகங்கையில் உரிய ஆவணம் இல்லாததால் ஜவுளிக்கடை வியாபாரியிடம் ரூ.2¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிரடியாக பறிமுதல் செய்தது.

Update: 2022-02-11 17:04 GMT
சிவகங்கை,

சிவகங்கையில் உரிய ஆவணம் இல்லாததால் ஜவுளிக்கடை வியாபாரியிடம் ரூ.2¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிரடியாக பறிமுதல் செய்தது.

வாகன சோதனை

வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.இதன்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 மேலும் பண நடமாட்டத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும்படைகள் அமைக்கபட்டுள்ளன. இந்நிலையில் சிவகங்கை பறக்கும்படை தாசில்தார் மைலாவதி தலைமையிலான குழுவினர் சிவகங்கையில் இளையான்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

ரூ.2¾ லட்சம் பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரூ.2.லட்சத்து 90 ஆயிரம் வைத்திருப்பது தெரிய வந்தது.
 இதை தொடர்நது வேனில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆர்.எஸ்.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் ஜவுளிக்கடை வைத்திருப்பதும், துணி மொத்த கொள்முதல் செய்ய மதுரைக்கு சென்றதும் தெரியவந்த்து. மேலும் உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்