19-வது வார்டு அ.தி.மு.க பெண் வேட்பாளர் மரணம்

மயிலாடுதுைற நகராட்சி 19-வது வார்டு அ.தி.மு.க. பெண் வேட்பாளர் மரணமடைந்தார்.

Update: 2022-02-11 16:58 GMT
மயிலாடுதுறை;
மயிலாடுதுைற நகராட்சி 19-வது வார்டு அ.தி.மு.க. பெண் வேட்பாளர் மரணமடைந்தார். 
அ.தி.மு.க பெண் வேட்பாளர் 
மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி அன்னதாட்சி(வயது 64). இவர், மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அ.தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். 
நேற்று காலை வரை அன்னதாட்சி அ.தி.மு.க. தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று காலை அன்னதாட்சி உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார். 
பாிதாப சாவு
மதியம் உணவு அருந்திய அவர் சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டார். பூஜையில் அன்னதாட்சி இருந்தபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் அவரை அக்கம பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள  தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
அ.தி.மு.க. வேட்பாளர் அன்னதாட்சி திடீர் என்று மரணம் அடைந்ததால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அ.தி.மு.க.வினரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் செய்திகள்