முதியவரிடம் ரூ.1½ லட்சம் திருட்டு

முதியவரிடம் ரூ.1½ லட்சம் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-11 16:36 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் வடக்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பொன்னுச்சாமி (வயது67). இவர் பரமக்குடியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை விற்று ரூ.3 லட்சம் பணத்துடன் அரசு பஸ்சில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வந்துள்ளார். சத்திரக்குடி பகுதியில் 8 நபர்கள் ஏறிய நிலையில் அதில் ஒருவர் மட்டும் பொன்னுச ்சாமியின் அருகில் அமர்ந்து வந்தபோது ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் அனைவரும் இறங்கிவிட்டனர். இந்நிலையில் ராமநாதபுரம் பஸ்நிலையம் வந்தபோது பொன்னுச்சாமி தான் வைத்திருந்த பணப்பையை திறந்து பார்த்தபோது அதில் ரூ.1½ லட்சம் மட்டும் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பக்கத்தில் அமர்ந்து வந்த மர்ம நபர் பணத்தை திருடிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்னுச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்