ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-02-11 16:33 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ரெகுநாதபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த வாசு என்பவரின் மகன் நவீன்குமார் (வயது33). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ரெகுநாதபுரம் பஸ்நிலையம் அருகில் ஓட்டி வந்துள் ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கிருஷ்ணாபுரம் அருகில் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் சவாரி வருமாறு கேட்டுள்ளனர். வீட்டிற்கு செல்வ தாகவும் வரமுடியாது என்றும் நவீன்குமார் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் தரக்குறைவாக பேசி அரிவாளால் வெட்டி படுகாயபடுத்தியதோடு ஆட்டோ வையும் சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார் சிகிச்சைக்காக ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்