நாகை மாவட்டத்தில் பலத்த மழை பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
நாகை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கோடியக்கரையில் அதிகபட்சமாக 8 செ.மீட்டர் மழை காட்டித்தீர்த்தது.;
வேதாரண்யம்;
நாகை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கோடியக்கரையில் அதிகபட்சமாக 8 செ.மீட்டர் மழை ெகாட்டித்தீர்த்தது.
அறுவடை பாதிப்பு
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. தொடர் மழை காரணமாக, நாகை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் பள்ளி முடிந்த பின் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். குறிப்பாக சம்பா நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர். அறுவடை செய்த இடங்களில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலைங்களுக்கு நெல்லை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம், கோடியக்கரை, வாய்மேடு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வேதாரண்யத்தில் நேற்று காலை 8 மணி வரை
7 செ.மீ மழையும், கோடியக்கரையில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்யும் திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. அறுவடை செய்து வயலில் கிடந்த வைக்கோல் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெல்லை தார்பாய் மூலம் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர். மழையால் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென பெய்த இந்த மழையால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது.