சிலிண்டர் திருடியவர் கைது

விளாத்திகுளத்தில் வீட்டில் சிலிண்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-02-11 15:57 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் எட்டயபுரம் ரோட்டைச் சேர்ந்த பப்பு மகன் சுப்பையா (வயது33). இவரது வீட்டிற்குள் இருந்து  நேற்று முன்தினம் இரவில் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சிவசக்தி விக்னேஷ் (எ) விக்கி (21) என்பவர் சுவர் ஏறிக்குதித்து ஓடியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பையா குடும்பத்தினர் சிறிது தூரம் துரத்தி சென்றுள்ளனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் வீட்டிற்குள் பார்த்தபோது, 3 கியாஸ் சிலிண்டர்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுப்பையா அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் வழக்குப்பதிவு செய்து சிவசக்தி விக்னேஷை கைது செய்தார். அவரிடமிருந்து 3 கேஸ் சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்