விபத்தில் வாலிபர் சாவு

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்

Update: 2022-02-11 15:21 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
வாலிபர்
விளாத்திகுளம் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பாலாஜி (வயது 22). இவர் வேளாண்மை டிப்ளமோ முடித்து ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலையில் கோவில்பட்டி அருகே உள்ள சால் நாயக்கன் பட்டி கிராமத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு,  தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 
சம்பவ இடத்தில் சாவு
ஈராச்சி கசவன்குன்று 4 முக்கு ரோடு சந்திப்பில் வரும்போது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாலாஜி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜி உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
டிரைவர் கைது
இந்த விபத்து தொடர்பாக கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் மீனாட்சிபுரம், மேல காலனியைச் சேர்ந்த பாக்கியம் மகன் காளிமுத்து (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்