குழந்தை தொழிலாளி உள்பட 2 பேர் மீட்பு

குழந்தை தொழிலாளி உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2022-02-10 20:35 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மேற்பார்வையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு-கொத்தடிமைகள் முறை ஒழிப்பு குழுவினர் நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் பெரம்பலூர் நகரில் குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சிறுவனையும், பிச்சை எடுத்து கொண்டிருந்த சிறுவனையும் மீட்டு குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்