ரெயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
திருச்சி
நிஜாமுதீனில் இருந்து மதுரை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று முன்தினம் திருச்சி வந்தபோது அதில் ஏறி ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் கதவு ஓரம் இருந்த வெள்ளை நிற பையில் 11 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை கடத்தி வந்தது யார்? என தெரியவில்லை. அவற்றை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.35 ஆயிரத்து 500 இருக்கும் என தெரிகிறது.