மனைவியை வெட்டிய வழக்கு: நாங்குநேரி கோர்ட்டில் தொழிலாளி சரண்

நாங்குநேரி கோர்ட்டில் தொழிலாளி சரண் அடைந்தார்

Update: 2022-02-10 20:19 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெய பாக்கியவதி (31). 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜெய பாக்கியவதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை அருகே தெற்கு அரியகுளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று சின்னத்துரை, ஜெய பாக்கியவதி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சின்னத்துரையை தேடி வந்தனர். இந்த நிலையில் சின்னத்துரை நாங்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

மேலும் செய்திகள்