சுரண்டை: கார் மோதி வாலிபர் காயம்
கார் மோதி வாலிபர் பலத்த காயம் அடைந்தார்
சுரண்டை:
ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மகன் ராஜகுரு (வயது 26). விவசாயி. இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக சுரண்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வீரகேரளம்புதூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த காரின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுரு பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த ராஜகுருவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.