பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய முயற்சி: தாய் மீது வழக்கு
பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய முயற்சி தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு அவருடைய தாயார் கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி, சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், அந்த மாணவியின் தாயார் மீது கட்டாய திருமண தடைச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
------