கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
இளையான்குடியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி உறுதிமொழி வாசிக்க கல்லூரி அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றனர். நம் நாட்டில் கிராமப்புற மக்கள் அறியாமையில் இருந்து வரும் சூழ்நிலையில் அவர்களையும், குழந்தைகளையும், குடும்ப உறுப்பினர்களையும், மாத சம்பளமின்றி கொத்தடிமைகள் போல நடத்தி வந்தனர். இதுபோன்று கம்பெனிகள், செங்கல் சூளை, ஆடு மேய்ப்போர் போன்ற தொழில்களில் வருடத்திற்கு குறைந்த சம்பளத்தில் பணி புரியவைத்து கொத்தடிமையாக இருந்தனர். இவ்வாறு நடப்பதை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பார்த்திமா, பீர் முகமது மற்றும் அப்ரோஸ் ஆகியோர் செய்திருந்தனர்.