மாட்டு வண்டிகளில் ஆற்றில் மணல் அள்ளிய 2 பேர் கைது

நன்னிலம் அருகே மாட்டு வண்டிகளில் ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-10 19:20 GMT
நன்னிலம்:
நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் முடிகொண்டான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முடிகொண்டான் அருகே உள்ள திருமலைராஜன் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆலங்குடி வடக்கு தெருவை சேர்ந்த முத்துராமன் (வயது 45). முடிகொண்டான் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாநிதி (48) என்பதும், அவர்கள் மாட்டு வண்டிகளில் ஆற்றில் மணல் அள்ளியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன், கருணாநிதி ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய மோகன் என்பவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்