தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

வலங்கைமான் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-02-10 18:49 GMT
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே ஊத்துக்காடு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய  மகன் விஜயகுமார் (வயது29). பெயிண்டர் வேலை பார்த்து வந்த இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 6 மாத ஆண் குழந்தை உள்ளது. விஜயகுமாருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி டாக்டரிடம் காண்பித்தும் வயிற்றுவலி தீராத நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்