கந்திலி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது. ரூ.9 லட்சம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல்

கந்திலி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-02-10 18:37 GMT
திருப்பத்தூர்

கந்திலி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே வேப்பல்நத்தம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் கந்திலி சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் வேப்பல்நத்தம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு 7 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.
அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அதில் ஒருவர் கணேசனை கீழே தள்ளிவிட்டு தப்ப முயன்றார். உடனடியாக அருகிலிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். மேலும் 2 பேர் பிடிபட்டனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

ரூ.9 லட்சம் பறிமுதல்

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 49), ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேப்பூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (32), ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த மகேந்திர ரெட்டி (50) என தெரியவந்தது. இவர்கள் பல்வேறு கிராமங்களில்  சூதாட்ட கிளப் நடத்தி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து ரூ.9 லட்சத்து 7 ஆயிரம், 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்