மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

குடவாசலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-02-10 18:36 GMT
குடவாசல்:
குடவாசல் தெற்கு மடவளாகத்தை சேர்ந்தவர் அருள். இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை பூட்டி வைத்துவிட்டு, தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அருள் கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்தநிலையில் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கடைவீதியில் ஒரு கடையில் மோட்டார் சைக்கிளை ஒருவர் விலைபேசுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மோட்டார் சைக்கிளுடன் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் திருப்பந்துறையை சேர்ந்த சின்னராஜா (வயது 34) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி விற்பதற்காக நின்று இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், சின்னராஜாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்