உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-10 18:35 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிரடி சோதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும்படை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் புதிய பஸ்நிலைய நுழைவு வாயில் பகுதியில் துணை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது. தேரிருவேலியை சேர்ந்த அன்சாரி என்பவர் கொண்டு சென்ற அந்த பணத்தை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் சந்திராவிடம் ஒப்படைத்தனர்.

அபிராமம்

இதே போல கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் பறக்கும் படை குழுவினர் திருலோகந்தர், கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலர் மற்றும் கள அலுவலர், சப்-இன்ஸ்பெக்டர் மலைராஜ், ஏட்டு ராமசாமி ஆகியோர் நத்தம் சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக    செபஸ்டீன் என்பவர் வந்த நான்கு சக்கர வாகனத்தை பரிசோதித்த போது, உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அபிராமம் பேரூராட்சி தேர்தல் உதவியாளர் முகம்மது ஆசிக் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்