அரசு பள்ளி காம்பவுண்டு சுவர் இடிப்பு

நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளி காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-02-10 18:22 GMT
நல்லம்பள்ளி:-
தொப்பூர் அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தில் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த காம்பவுண்டு சுவரை மர்ம கும்பல் ஒன்று இடித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பள்ளிக்கூட காம்பவுண்டு சுவரை இடித்து அட்டூழியம் செய்த கும்பல், முகமூடி அணிந்து சென்ற காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டதால், பள்ளி வளாகத்துக்குள் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்