பெயிண்டர் தலை துண்டித்து கொலையில் உறவினர் கைது

ஓசூர் அருகே பெயிண்டர் தலை துண்டித்து கொலை தொடர்பாக உறவினர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-02-10 18:22 GMT
ஓசூர்:-
ஓசூர் அருகே பெயிண்டர் தலை துண்டித்து கொலை தொடர்பாக உறவினர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெயிண்டர் கொடூர கொலை
ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள எலுவப்பள்ளியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 26). பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி சந்திரிகா என்ற மனைவியும், 3 வயது பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சந்திரிகா, பெங்களூருவில் தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.
கடந்த 8-ந் தேதி இரவு பிரதீப்குமார் கொடூரமாக கொலை செய்யப்படடார். அவரை கொன்ற கொலையாளிகள் அவரது தலையை தனியாக எடுத்து அந்த பகுதியில் உள்ள மகேஸ்வரம்மா கோவில் வாசலில் வைத்து சென்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்கள்
இந்த கொலை தொடர்பாக போலீஸ் உயர்அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை நடந்தது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட பிரதீப்குமாரும், பெங்களூரு ஒசகோட்டா சமயோதனஅள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்ற அப்பி (25), பெங்களூரு இக்கலூரை சேர்ந்த முரளி (35) ஆகியோர் உறவினர்கள் என்பதும், அவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததும் தெரியவந்தது. 
இந்த நில பிரச்சினை தொடர்பாக பிரதீப்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டதுடன், அவரது தலையை அங்குள்ள கோவிலில் கொலையாளிகள் வைத்து சென்றதும் தெரியவந்தது.
உறவினர் கைது
இதற்கிடையே பிரதீப்குமார் கொலை தொடர்பாக உறவினர் சந்தோசை போலீசார் கைது செய்தனர். மேலும் முரளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்