தேர்தலையொட்டி நாகர்கோவிலில் போலீசார் கொடி அணிவகுப்பு
தேர்தலையொட்டிநாகர்கோவிலில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யவும், 100 சதவீத வாக்குப்பதிவை பொதுமக்களிடம் வலியுறுத்தியும் நாகர்கோவில் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நேற்று மாலை வடசேரி அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டது.
நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமை தாங்கி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். அணிவகுப்பான புத்தேரி பாலம், கீழ கலுங்கடி, அருகுவிளை வழியாக மீண்டும் வடசேரி சந்திப்பை வந்தடைந்தது.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், கிங்ஸ்லி ஆனந்த், ஜெயலட்சுமி, கண்மணி, ஜோதிலட்சுமி உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
அணிவகுப்பின் போது போலீசார் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். மேலும், ெபாதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. இதனை சாலையில் இருபுறமும் நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.