சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து சிறுமியை அந்த வாலிபர் கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினார். மேலும் சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து சிறுமியை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்தபோது சிறுமிக்கு 17 வயது என்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிணத்துக்கடவு போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக மகேசை போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.