தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-02-10 17:18 GMT
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

தெருநாய்கள் தொல்லை

பொள்ளாச்சி ரெயில்நிலையம் ஆனைமலை செல்லும் மெயின் ரோட்டில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த  ரெயில் நிலையம் முன்பு ஏராளமான நாய்கள் கூட்டங்கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்த நாய்கள் சில நேரத்தில் அந்த வழியாக செல்லும் பயணிகளை துரத்துகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும்.
முருகன், பொள்ளாச்சி.

கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடு வட்டம் பேரூராட்சி உள்ளது. இங்கு மார்க்கெட் பின்புறம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் கட்டப்பட்ட கழிப்பறைகள் உள்ளன. ஆனால் அவை கள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் அங்கு போதிய கழிப்பறைகள் இல்லாததால் இங்கு வந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்பாட்டில் இருக்கும் கழிவறைகளை பராமரிப்பதுடன், கூடுதல் கழிவறை கட்ட வேண்டும். 
பசவய்யா, நடுவட்டம்.

மண் மூடிய கால்வாய்

கோவை சுங்கத்தில் இருந்து புலியகுளம் செல்லும் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கால்வாய் மண் மூடி காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதுடன், சில பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
ஸ்டெல்லா, புலியகுளம்.

இறைச்சி கழிவுகள்

கோவை சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர். சாலையின் அருகே 5-வது வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இறைச்சி கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு ரத்தம் படிந்த நிலையில் கழிவுகள் காணப்படுவதால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். 
சிவசந்தோஷ்,சாய்பாபா காலனி.

கால்நடைகள் தொல்லை 

கோவை 85-வது வார்டு செட்டி வீதி, 40 அடி திட்ட சாலை, அபிராமி நகர் பின்புறம் அமைந்து உள்ள தெருவில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளது. இந்த குப்பைகள் சரிவர சுத்தம் செய்யப்படாததால் அங்கு மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சூழ்ந்து அதில் உள்ள பொருட்களை சாப்பிடுகிறது. சில நேரத்தில் அவைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்து உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதுடன், கால்நடைகள் தொல்லையையும் கட்டுப்படுத்த வேண்டும்.
புவனேஷ்வரி, கோவை.

புதர்கள் சூழ்ந்த கழிவறை 

குன்னூர் ராஜாஜி நகர் மேல்புறம் நகராட்சி சார்பில் கழிவறை கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிவறை போதிய பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அங்கு கொடிய விஷம் கொண்ட பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இரு்ககிறது. எனவே இந்த கழிவறை இருந்தும் பயன்படாத நிலையில் இருப்பதால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி இந்த கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ரசூல், ராஜாஜி நகர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் புளியம்பட்டி பகுதியில் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அந்தப்பகுதி வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  ரஞ்சித், புளியம்பட்டி.

குண்டும்-குழியுமான சாலை

  பொள்ளாச்சியில் இருந்து வெங்கடேசா காலனி வழியாக கோவை செல்லும் பஸ்கள் வருகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  மகேந்திரன், பொள்ளாச்சி.

நிரம்பி வழியும் குப்பைகள்

  கோவை கணபதி செக்கான்தோட்டம் பகுதியில் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து குப்பைகளை கொட்டுவதால் குப்பை தொட்டிகள் உடனே நிரம்பிவிடுகிறது. ஆனால் அவற்றை முறையாக சுத்தம் செய்யாததால் குப்பைகள் சூழ்ந்து நடுரோட்டுக்கு வந்து விடுவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து நிரம்பி வழியும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  சுரேஷ், செக்கான்தோட்டம்.

பணிகள் முடியாத சுரங்கப்பாதை

  கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகள் ஆகியும் இந்த பணி முடிவடையவில்லை. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். வழியில் பாதி தூரம் வாகனங்களை தள்ளியபடி செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பாரதி, சிங்காநல்லூர்.
  

மேலும் செய்திகள்