நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

Update: 2022-02-10 17:08 GMT
மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பதற்றமான 54 வாக்குச்சாவடிகளில் தேவையான பாதுகாப்புகளை உறுதி செய்வது குறித்து டி.ஐ.ஜி. ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்தராஜ் (மயிலாடுதுறை), லாமேக் (சீர்காழி), மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப் பள்ளியில் அமைய உள்ள வாக்குச்சாவடியையும், வாக்கு எண்ணும் மையத்தையும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்