பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது
வேதாரண்யம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.;
வேதாரண்யம்:-
வேதாரண்யம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கிலி பறிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது40). இவர் கடந்த 21.11.2021 அன்று நாகை மெயின் சாலையில் கள்ளிமேடு பாலம் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒருவர் வித்யா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து விஜயா வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் போில் வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இதில் தலைஞாயிறு அருகே உள்ள திருமாளம் அல்லிக்குளம் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் ரமேஷ் (29) என்பவர் விஜயாவிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து 4¾ பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.