ராஜபாளையம் நகராட்சி ஊழியர் சொத்துக்களை கணக்கிட்ட அதிகாரிகள்

சொத்து குவிப்பு புகாரில் சிக்கிய ராஜபாளையம் நகராட்சி ஊழியரின் சொத்துக்களை அதிகாரிகள் குழுவினர் கணக்கிட்டனர்.

Update: 2022-02-10 15:52 GMT
ராஜபாளையம், 
சொத்து குவிப்பு புகாரில் சிக்கிய ராஜபாளையம் நகராட்சி ஊழியரின் சொத்துக்களை அதிகாரிகள் குழுவினர் கணக்கிட்டனர்.
விசாரணை
ராஜபாளையம் நகராட்சியில் ராஜேந்திரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியராக பணியாற்றினார். தொடக்கத்தில் சில காலம் வருவாய் அலுவலர் மற்றும் வரி வசூலிக்கும் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார்கள் வந்ததன் பேரில், கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு தற்போது வரை இவர் பணிக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் உள்ளார்.
மேலும் இவர் தன் பெயரில் சொத்து எதுவும் வாங்காமல், தனது உறவினர்கள் பெயரில் பினாமியாக அசையா சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
கணக்கீடு
இதனையடுத்து நேற்று விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரான் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் இவரது சொத்து மதிப்பை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக இவரது மனைவி பெயரில் ஆண்டத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வீடு, இவரது மகள் பெயரில் பூபால்பட்டி தெருவில் உள்ள வீடுகளின் மதிப்பு, மின் இணைப்புகள், வீட்டு உபயோக பொருட்களின் மதிப்பு உள்ளிட்டவற்ைறை அதிகாரிகள் கணக்கீடு செய்தனர்.

மேலும் செய்திகள்